ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு சரிநிகர் சமானமாக வேம்புலியாக களத்தில் நின்று கவனம் ஈர்த்தவர் ஜான் கொக்கன். வீரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் சார்பட்டா பரம்பரைதான் அவரை சரியாக அடையாளம் காட்டி இருக்கிறது.
கட்டுமஸ்தான அவரது சிக்ஸ் பேக் உடல் அமைப்புதான் அவருக்கு வேம்புலி கேரக்டரை பெற்றுத் தந்தது. சார்பட்டா படத்திற்காக 3 மாதங்கள் ஆர்யாவுடன் சண்டை பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்துள்ளார். தற்போது தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகராகி வருகிறார். குறிப்பாக வில்லன் கேரக்டர்கள் அதிக அளவில் வருகிறது.
தற்போது கன்னடத்தில் கேஜிஎப் 2ம் பாகத்தில் நடித்து வரும் அவர், புனித் ராஜ்குமாருக்கு வில்லனாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதுதவிர ஒரு தெலுங்கு படத்திலும், இரண்டு தமிழ் படத்திலும் நடிக்கிறார். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.