அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் பலருக்கும் திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சமீப காலத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த ஷோ என்றால் அது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களும் ரசிகர்களும் அதிகம். அடுத்தடுத்த சீசன்கள் வெற்றியடைந்த பிறகும் முதல் சீசனின் முதல் எபிசோடை புதிதாக பார்ப்பது போல பார்க்குமளவிற்கு இந்த ஷோவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.
அதே போல, இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களுமே பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டனர். போட்டி என்பதை தாண்டி, இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையுமே தனித்தனியாக மக்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். சின்னத்திரையில் ரசிகர்ளின் பேராதாரவை பெற்றதாலேயே இவர்களுக்கு வெள்ளித்திரையின் கதவுகளும் சுலபமாக திறந்துள்ளது.
குக் வித் கோமாளி அஸ்வின் தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோ ஆகிவிட்டார். புகழ், அஜித்தின் வலிமை உட்பட பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். அனைவருக்கும் பிடித்தமான சுட்டிக்குழந்தை சிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கிறார். தர்ஷா குப்தா, ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகியாகவும் சன்னி லியோனுடன் இணைந்து காமெடி த்ரில்லர் படத்திலும் நடிக்கிறார். பவித்ரா லக்ஷ்மி எனும் மற்றொரு போட்டியாளர் நகைச்சுவை நடிகர் சதீஷூடன் இணைந்து நடிக்கிறார்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற இத்தனை பேருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை.