விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

உலகளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான ‛சர்வைவர் நிகழ்ச்சி முதன்முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. செப்., 12 முதல் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் அர்ஜூன் முதன் முறையாக இந்நிகழ்ச்சி மூலம் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். ஆப்பிரிக்காவில் உள்ள  ஜான்சிபர் தீவில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. 
இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். விக்ராந்த், உமாபதி ராமைய்யா, நந்தா, பெசன்ட் ரவி, நடிகைகள் விஜயலட்சுமி, சிருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி ஆகிய 8 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 10 போட்டியாளர்களில் 8 போட்டியாளர்கள் விபரம் கடந்த ஞாயிறு அன்று போட்டியின் துவக்க நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்பட்டனர். 
|  | 
அதன்படி நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும், பிகில் படத்தில் நடித்தவருமான இந்திரஜா, ‛வடசென்னை, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரண் சக்தி, நடிகை லக்ஷமி ப்ரியா, நடிகர் ராம் சி, நடிகர் லக்கி நாராயணன், விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணன், சிங்கப்பூரை சேர்ந்த பாடகி லேடி காஷ், நடிகர் அம்ஜத் கான் என மொத்தம் 16 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். இன்னும் இரண்டு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் களமிறங்க உள்ளனர். 
|  | 
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            