படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புதிய சீரியலில் ஜீவா தங்கவேல், ஸ்ரித்தா சிவதாஸ் இணைந்து நடிக்கின்றனர். சீரியலுக்கான புரோமோவை இருவரும் தங்களது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற ஜீவா, தொடர்ந்து கனா காணும் காலலங்கள் தொடரில் நடித்தார். அதன் பின் வெள்ளித்திரைக்கு சென்றார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சின்னத்திரை நாயகனாக களமிறங்குகிறார்.
கலர்ஸ் தமிழின் "எங்க வீட்டு மீனாட்சி" என்ற புதிய நெடுந்தொடரில் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரித்தா சிவதாஸ் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தொடரின் புரோமோவை இருவரும் தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அதை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.