'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் | ஹரி ஹர வீர மல்லு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக இத்தனை கோடியா? | தனுஷ், வெங்கி அட்லூரி படம் எப்போது? | கதை எழுத தயார், இயக்குனர் ஆக மாட்டேன் : யோகி பாபு | ஐந்தே மாதங்களில் சதம் அடித்த 2025, சாதனையா? சோதனையா? | வாயெல்லாம் அடைத்துவிட்டது : பிறந்தநாள் வாழ்த்தில் நெகிழ்ந்த இளையராஜா | கொலை மிரட்டல் காரணமாக மேனேஜர் மீது போலீசில் புகார் அளித்த உன்னி முகுந்தன் | மகள் பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்றை நீக்கிய ஜோதிகா : சிங்கம் 4 காரணமா? | என்றென்றும் உங்கள் நண்பன் : மணிரத்னத்துக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து |
சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான டாப் 9 போட்டியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
விஜய் டிவியில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று 8-வது சீசனில் நுழைந்துள்ளது. பல போட்டியாளர்கள் பங்கு பெற்ற சூப்பர் சிங்கர் 8, 45 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது.
சூப்பர் சிங்கர் 8-வது சீசனில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெறப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நடக்கப்போகும் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பட்டியலை விஜய் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
டாப் 9 பட்டியலில் இருக்கும் அபிலாஷ், பரத், அனு ஆனந்த், மானசி, முத்து சிற்பி, அய்யனார், ஆதித்யா, ஸ்ரீதர் சேனா, அரவிந்த் ஆகியோர் இந்த வாரம் போட்டியிடுகின்றனர். இவர்களில் யார் யார் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.