திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
பல புதுமையான சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது விஜய் டிவி. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அத்தொலைக்காட்சியின் புதிய சீரியலின் புரோமோ ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
விஜய் டிவியில் "தென்றல் வந்து என்னைத் தொடும்" என்கிற புதிய தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. அதன் புரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் வெளிநாடு சென்று படித்து விட்டு சொந்த ஊருக்கு வரும் நாயகி கோவிலுக்கு வருகிறார். அங்கு கோவிலில் வைத்து தாலி கட்டிக் கொண்ட ஒரு ஜோடியை அந்த ஏரியாவில் சண்டித்தனம் செய்யும் நாயகன் கட்டிய தாலியை பறிக்க முயல, அவரை அடித்து விடுகிறார் நாயகி. அதோடு அம்மன் சாட்சியாக கட்டிய தாலியை நீ எப்படி பறிக்கலாம் என நாயகி கேட்க, ஆத்திரத்தில் கோவிலில் அம்மன் கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறை எடுத்து நாயகியின் கழுத்தில் போட்டு, நெற்றியில் திலகமும் இட்டு, நான் இப்போது இந்த மஞ்ச கயிறை உன் கழுத்தில் போட்டுவிட்டேன், நீ என் பொண்டாட்டியா என கேட்கிறார்.
தென்றல் வந்து என்னைத் தொடும் - விரைவில்.. #ThendralVanthuEnnaiThodum #VijayTelevision #VijayTv pic.twitter.com/K9UpHTpWwu
— Vijay Television (@vijaytelevision) July 25, 2021