ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
டிஆர்பி ரேட்டிங்கில் இதுவரை டாப் 5 பட்டியலுக்குள் கூட வராத கண்ணான கண்ணே சீரியல், ஸ்ட்ரைட்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. தொலைக்காட்சிகளுக்கிடையே டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வருவது தெரிந்த விஷயமே. அந்த வகையில் முன்னணி டிவி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா சீரியல் தான் அதிக பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் வரும்.
இந்நிலையில் கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியானதில், அதிசயத்தக்க வகையில் கண்ணான கண்ணே சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இதுவரை டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 பட்டியலுக்குள் கூட வராத இந்த தொடர், கடந்த வாரம் ஒளிப்பரப்பான யுவா - மீரா திருமணம் மூலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் 11.08 புள்ளிகள் பெற்று டி.ஆர் பி யில் ஸ்ட்ரைட்டாக முதலிடத்தை பிடித்தது.
இரண்டாவது இடத்தை ரோஜா சீரியலும், மூன்றாவது இடத்தை விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலும் பிடித்துள்ளன.