ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

தனது அபிநயா கிரியேஷன் மூலம் ஏராளமான சின்னத்திரை தொடர்களை தயாரித்தவர் ஜேகே என்று அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணசாமி. மாண்புமிகு மாமியார், மகாராணி செங்கமலம், க்ரீன் சிக்னல், செல்லம்மா, மங்கள அட்சதை, கேள்வியின் நாயகனே, என் பெயர் ரங்கநாயகி. மாங்கல்யம். ஆடுகிறான் கண்ணன், தீர்க்கசுமங்கலி, செல்லமடி நீ எனக்கு, திருப்பாவை, அனுபல்லவி, வெள்ளைத் தாமரை, தேவதை உள்பட ஏராளமான தொடர்களை தயாரித்தார். இதில் திருப்பாவை மெகா தொடரை கதை, வசனம் எழுதி ஜேகே இயக்கினார்.
சின்னத்திரையின் ஏவிஎம் சரவணன் என்று அழைக்கப்பட்ட ஜேகே கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வாரமாக குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அது பலனளிக்காமல் காலமானார். அவரது மறைவுக்கு சின்னத்திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கும்பகோணத்தைச் சேர்ந்த ஜேகே கல்லூரிப் படிப்பை முடித்ததும் சுங்க இலாகாவில் முக்கிய அதிகாரியாக பணியாற்றிவர். ஜே.கேவின் மகன்கள் விஜய், ஆனந்த், பிரசன்னா ஆகியோருடன் இணைந்து ஜே.கேவின் மனைவி ராதா கிருஷ்ணசாமி அபிநயா கிரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தயாரிப்பில் இறங்கினார்.
1996 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கோவை அனுராதா இயக்கத்தில் காஸ்ட்லி மாப்பிள்ளை என்கிற தொடரை முதல் தொடராக தயாரித்து ஒளிபரப்பியது. தொடர்ந்து அபிநயா கிரியேஷன் தொடர்கள் வெற்றி பெறவே, தனது சுங்க இலாகா பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் கதை இலாக்காவை தொடங்கி, மெகா தொடரில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டார்.
இன்று முன்னணி இயக்குனராக விளங்கும் சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் சத்யா உட்பட ஏராளமான கலைஞர்களை தமிழ் திரை உலகிற்கும், சின்னத்திரை உலகிற்கும் தந்த நிறுவனம், ஜே.கேயின் அபிநயா கிரியேஷன்ஸ். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி தொடரின் இயக்குநர் பிரியன், செம்பருத்தி தொடரின் இயக்குனர் நீராவி பாண்டியன் ஆகியோரும் அபிநயா கிரியேஷன்ஸ் அறிமுகப்படுத்திய இயக்குனர்கள்தான்.