'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தளர்வில்லாத ஊரடங்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கடைபிடிக்கப்பட உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பே சினிமா மற்றும் டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதற்கு முன்பு வரை நடைபெற்ற சில படப்பிடிப்புகளின் காரணமாக கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் மரணம் அடைந்தும் விட்டனர்.
சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் ஊரடங்கை மீறி நடைபெற்ற மலையாள 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டு அரங்கிற்கு 'சீல்' வைக்கப்பட்டது.
கடந்த வருடம் கொரோனா பாதிப்பின் போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட போது டிவி நிகழ்ச்சிகள், தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சில மாதங்களுக்கு பழைய நிகழ்ச்சிகளையே திரும்பவும் ஒளிபரப்பினார்கள். அதே போன்று இந்த வருடமும் ஆரம்பமாகிவிட்டது.
சில டிவிக்களில் முக்கிய ஷோக்களை மறு ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சில தொடர்களைத் தொகுத்து ஒளிரப்பு செய்து வருகிறார்கள். இன்னும் இரண்டு வார காலத்திற்காவது ஊரடங்கு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையில் டிவி நிகழ்ச்சிகளில் 'ரிபீட்'களைத்தான் அதிகம் பார்க்க வேண்டியதிருக்கும்.