சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பிரபல சின்னத்திரை நடிகரான வசந்த் வசி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் செந்தில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 1, பாரதிதாசன் காலனி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வேலையில்லா பட்டதாரி படத்தில் இயக்குநர் பாலாஜி மோகன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தது இவர் தான். ஆனால், திரையுலகம் இவரை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
காரணம் இவர் ஹீரோவாக நடித்த சீரியல்களின் புரோமோக்கள் மற்றும் போஸ்டர்களில் இவரது முகத்தை காண்பிக்கவே மாட்டார்கள். இதன் காரணமாகத்தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரிலிருந்து வசந்த் வசி வெளியேறினார். ஆனால், அதன் பிறகு நடித்த ஹீரோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திலும் இவர் நடித்த பிரசாத் கதாபாத்திரத்திற்கு இவர் வெளியேறிய பின் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2விலும் வசந்த் வசி தற்போது விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக மீண்டும் வெங்கட் ரங்கநாதன் எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த கதையிலும் வெங்கட் எண்ட்ரிக்கு பிறகு தான் செந்தில் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ரசிகர்கள் சிலர் வசந்த் வசியை சின்னத்திரை வஞ்சிப்பதாக புகார் கூறி வருகின்றனர்.