சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

முன்னணி தொலைக்காட்சியில் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது மாயா தொடர். இது ஆவியும், ஆண்டவனும் மோதும் பேண்டசி தொடர். சுந்தர்.சி, குஷ்பு தயாரிக்கிறார்கள். நந்தாஸ், ஆர்.டி.நாராயணமூர்த்தி இயக்குகிறார்கள். சி.சத்யா பாடலுக்கு இசை அமைக்கிறார், ஜி.கிளமனட் பின்னணி இசை அமைக்கிறார். பா.விஜய் டைட்டில் பாடலை எழுதியுள்ளார்.
திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது. இதில் வின்சென்ட் அசோகன், சிங்கமுத்து, மனோபாலா, குலப்புல்லி லீலா, நிதின், சாஜன் என பல திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அஜய், தனிஷா ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.