ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சியான காப்பி வித்த டிடி ரொம்பவே பாப்புலர். திரைப்பட நட்சத்திரங்கள் டிடி நடத்தும் நிகழ்ச்சியென்றால் மறுப்பேதும் சொல்லாமல் செல்வார்கள். அந்த அளவிற்கு டிடி நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலம். மற்றும் செல்லப்பிள்ளை. தற்போது புதிய பொலிவுடன் சில மாற்றங்களுடன் அதே நிகழ்ச்சி அன்புடன் டிடி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் சேனல் வீக்கெண்ட் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை இன்று முதல் (ஏப்ரல் 30) ஒளிபரப்புகிறது. இது ஒவ்பொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணக்கு ஒளிபரப்பாகும். வார நாளில் மறு ஒளிபரப்பாகும். இதனை சுஹாசினி தொகுத்து வழங்குகிறார். திரைப்பட நட்சத்திரங்களை ஜாலியாக பேட்டி எடுக்கும் அதே நிகழ்ச்சிதான் இதுவும். எந்த மாதிரியான அம்சங்கள் புதிதாக இருக்கும் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது தெரியும்.
இந்த நிகழ்ச்சி குறித்து சுஹாசினி கூறியிருப்பதாவது: நிறைய சேனல்களில் நிறைய பேர் செலிபிரிட்டி சாட் ஷோ பண்றாங்க. அதையே நாமும் பண்ணணுமானுன்னு யோசித்தேன். ஆனால் அவர்கள் நம்முடன் பேசுகிற அந்த கொஞ்ச நேரத்தில் அவர்களோடு வாழ்க்கையையே திரும்பி பார்க்கிறது அற்புதமாக இருக்கும். அதனால் பண்ணலாமேன்னு தோணிச்ச்சு. பண்ண முடிவு பண்ணிட்டேன். எனக்கு எல்லா செலிபிரிட்டியும் தெரியும். ஆனால் அவுங்க பர்சனல் பற்றி தெரியாது. தெரிஞ்சுக்குவோம். அவுங்க என்னோட பேசுவாங்க. என்கிறார் சுஹாசினி.