போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விஜய் டி.வி., 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் லிட்டில் ஜீனியஸ் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது. இதில் ஒரே பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் ஒரு குழுவாக பங்கேற்கலாம். தமிழ், கணிதம், பொது அறிவு, மற்றும் சினிமா அறிவுமிக்கவர்களாக இருக்க வேண்டும். போட்டி இதையொட்டியே இருக்கும். பல சுற்றுகள் போட்டி நடத்தப்பட்டு இறுதியில் லிட்டில் ஜீனியசாக யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது தெரியவரும். பங்கேற்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்டுகிறது.
இதற்கான நேர்முக தேர்வுகள் நடக்கிறது. வருகிற 19-ந் தேதி சனிக்கிழமை பாண்டிச்சேரி பகுதி மாணவர்களுக்கான நேர்முக தேர்வு பாண்டிச்சேரி தேங்காய்திட்டில் உள்ள ஆச்சார்யா பால சிக்ஷா மந்திர் காலை 9 மணிமுதல் நடக்கிறது.
சென்னை மாணவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 20ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் உள்ள எம்.சி.சி மேல்நிலை பள்ளியில் காலை 9 மணியில் இருந்து நடக்கிறது. மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதி கடிதத்துடன் கலந்து கொள்ளலாம்.