‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தி டப்பிங் தொடரான நாகினியில் நாகினியாக நடித்திருப்பவர் மவுனிராய். இந்தி சீரியல் நடிகையான மவுனிராய் நாகினி தொடர் மூலம் தமிழ் நாட்டில் பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றிருக்கிறார். அதுவும் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் கவர்ந்திருக்கிறார். தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் ஆண்களையும் டி.விமுன் உட்கார வைத்திருக்கிறார்.
அப்புறம் சும்மா விடுமா கோடம்பாக்க சினிமா. அவரை சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வைக்க பல சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் அவரை தொடர்பு கொண்டிருக்கின்றன. சில பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட அழைப்பு விடுத்திருக்கின்றன.
மவுனிராய்க்கு சினிமா புதிதில்லை. அபிஷேக் பச்சன் நடித்த ரன் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். ஒரு பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காததால் இனி சின்னத்திரைதான் என்று முடிவு செய்து சீரியலுக்கு வந்துவிட்டார். இப்போது தமிழ் சினிமா அழைக்கிறது. விரைவில் அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வர இருக்கிறது.