யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தவர் மதுமிதா. அதையடுத்து அட்டகத்தி, கண்பேசும் வார்த்தைகள், ராஜா ராணி, ஜில்லா, தெனாலிராமன் என சுமார் 25 படங்களில் நடித்தவர் ஜாங்கிரி மதுமிதா. அதோடு, சில சீரியல்களிலும் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். அழகி, மடிப்பாக்கம் மாதவனைத் தொடர்ந்து தற்போது சின்னப்பாப்பா பெரிய பாப்பா சீசன்-3யில் நடித்து வருகிறார்.
இதுபற்றி மதுமிதா கூறும்போது, நடிக்க வந்தபோது சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. அதனால்தான் தொடர்ந்து கிடைக்கிற வேடங்களில் நடித்து வந்தேன். அப்படி நான் நடித்தது எல்லாமே காமெடி ரோல்கள்தான். அதையடுத்து சின்னத்திரையிலும் காமெடி வேடங்களாக முதலில் வந்தது. பின்னர் அழுத்தமான வேடங்களும் கிடைத்தது. அதனால் சிரிக்க வைத்து வந்த நான் சில சீரியசான வேடங்களிலும் நடித்து நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினேன்.
அந்த மாதிரி வேடங்களில் என்னை பார்த்த நேயர்களும் அதை வரவேற்றனர். அதனால் இப்போது என் கவனம் நல்ல கேரக்டர்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. மேலும் டைரக்டர்கள், கேரக்டர், காட்சியைப்பற்றி சொன்னதும், எனது பாணியில் இன்னும் எந்த அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தலாம் என்று பலவாறாக யோசித்து நடிக்கிறேன். அதற்கு டைரக்டர்களும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். அதனால் சினிமாவில் காமெடி வேடங்கள் எனக்கு திருப்தியை கொடுத்தபோதும், சின்னத்திரையில் காமெடி கலந்த குணசித்ர வேடங்களும் எனக்கு நல்ல திருப்தியையே கொடுத்து வருகின்றன என்று கூறும் மதுமிதா, எதிர்காலத்தில் சீரியஸ் மட்டுமின்றி நெகடீவ் வேடங்கள் கிடைத்தாலும் கலந்து கட்டி நடிக்கவும் தயாராக இருக்கிறாராம்.