நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
விஜய் தொலைக்காட்சியில் 2011ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் சரவணன் மீனாட்சி. மற்ற சேனல்களெல்லாம் கணவன் மனைவி, மாமியார் மருமகள் பிரச்சினைகளை மையமாக வைத்து சீரியல்கள் பண்ணி வரும் நிலையில், விஜய் சேனலில் மட்டும் காதல் கதையில் இந்த சீரியலை தயாரித்து வழங்கி வந்தனர்.
இரண்டு சீசன்களாக பிரிக்கப்பட்ட இந்த தொடரில் முதல் பகுதியில் மிர்ச்சி செந்தில்- ஸ்ரீஜா இருவரும் காதலர்களாக நடித்தனர். அவர்களது நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அதோடு அந்த சீரியலில் இயல்பான காதலர்களாக நடித்த அவர்களுக்கிடையேயும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாகி விட்டனர்.
பின்னர் இரண்டாவது சீசனில் ரக்ஷிதா-வெற்றி நடித்தனர். ஆனால் முதல் பாத்திற்கு இருந்த பெயர் இவர்கள் நடிப்புக்கு கிடைக்கவில்லை. ஆனபோதும் பழைய பெயரைக்கொண்டே இப்போது வரை நகர்த்தி வருகின்றனர். ஆனால், இன்னும் ஓரிரு மாதத்தோடு சரவணன் மீனாட்சி முற்று பெறுகிறது.