போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஆரோகனம், மதயானைக்கூட்டம், நெருங்கி வா முத்தமிடாதே உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் விஜி சந்திரசேகர். பிரபல நடிகை சரிதாவின் தங்கையான இவர், கே.பாலசந்தர் இயக்கத்தில், ரஜினி நடித்த தில்லுமுல்லு படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து ஏராளமான படங்களில் கேரக்டர் நடிகையாக நடித்து வந்தவர், ஒரு கட்டத்தில டி.வி தொடர்களில் நடிக்கத் தொடங்கி விட்டார்.
அநத வகையில், பந்தம், ரேவதி, குடும்பம் ஒரு கோயில், அலைகள், அண்ணாமலை, பெண் என பல நெடுந்தொடர்களில் செண்டிமென்ட் வேடங்களில் நடித்துள்ளார். முக்கியமாக அவரை செண்டிமென்ட் அம்மாவாகவே பல தொடர்களில் நடிக்க வைத்தனர். இநத நிலையில், தற்போது அழகி என்ற சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜி.
இந்த தொடரிலும் செண்டிமென்ட் வேடத்திலேயே நடிக்கும் அவர், தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளிடமும் ரொம்ப அந்நியோன்யமாக பழகுகிறாராம். அந்த வகையில், அவர் நிஜத்திலும் ரொம்ப செண்டிமென்டானவர் என்கிறார்கள் அவருடன் நடிப்பவர்கள. மேலும், படப்பிடிப்பு ஓய்வு நேரங்களில் நிறைய செண்டிமென்ட் கதைகளை சொல்லும் விஜி, சில நாட்களில் தான் வீட்டில் இருந்தே சமைத்து எடுத்து வந்து, நடிகர் நடிகைகளுக்கும் கொடுக்கிறாராம். தன் கையாலே சமைத்த அந்த சமையலை, தானே அவர்களுக்கு பாசத்துடன் பரிமாறுகிறாராம்.
அதனால், எங்களைப்பொறுத்தவரை விஜி சந்திரசேகர், சீரியல் அம்மா மட்டுமின்றி, நிஜத்திலும் அவர் எங்களுக்கு ஒரு அம்மா போன்றுதான் தெரிகிறார் என்கிறார்கள்.