‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கேரளாவைச் சேர்ந்தவர் கல்யாணி. அம்மா டான்சர், அப்பா பைலட். சினிமாவில்தான் கல்யாணி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு சின்னத்திரைக்கு வந்து விட்டார். பீச் கேர்ள் நிகழ்ச்சி அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில்தான் அவருக்கு திருமணம் நடந்தது. கணவர் டாக்டர். தற்போது ஆண்டாள் அழகர், தாயுமானவன் தொடர்களில் நடித்து வருகிறார்.
சீரியல்களில் நடித்தாலும் மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் இருக்கிறார் கல்யாணி. இதற்காக கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார். ஹீரோயினாக இல்லாவிட்டாலும் நல்ல கனமான கேரக்டர் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறார். அவரது கணவரும் அவரது விருப்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார். அதோடு சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ அல்லது சீரியல் தயாரிக்கும் திட்டத்திலும் இருக்கிறார். இதற்காக கணவருடன் சேர்ந்து விரையில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்க இருக்கிறார்.