ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாவனா மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் கணவருடன் செட்டிலாகிவிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சிங்கப்பூர் என்ஜினீயர் நிகில் ரமேசுக்கு மும்பைக்கு டிரான்ஸ்பர் கிடைத்திருப்பதால் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்க தெருவுக்கு பக்கத்து தெருவுலதான் நிகிலோட வீடு, நான் படிச்ச காலேஜ்ல அவர் எனக்கு சீனியர். அப்போ எனக்கு பழக்கமில்லை. இரண்டு பேருக்கும் கல்யாணமாகி தேனிலவுக்கு புக்கட் தீவுக்கு போனபோதுதான் சூப்பர் சிங்கர் வாய்ப்பு வந்துச்சு. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டாமுன்னு நிகில்தான் அனுப்பி வச்சார். அப்புறம் அவர் சிங்கப்பூர் நான் சென்னைன்னு லைஃப் போச்சு. இப்போ அவருக்கு மும்பைக்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருச்சு. எனக்கு சூப்பர் சிங்கர் முடிஞ்சிருச்சு. அதான் அவரோடு மும்பையில செட்டிலாயிட்டேன். இனி அவருக்கு நல்ல மனைவியா இருக்கப்போறேன். அடுத்த டி.வி நிகழ்ச்சி பண்றது பற்றி இப்போ எதுவுமே யோசிக்கல. பார்க்கலாம் என்கிறார் பாவனா.