110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் | பிளாஷ்பேக் : நடிகையான சர்க்கஸ் கலைஞர் | கிரிப்டோ கரன்சி மோசடி : காஜல், தமன்னாவுக்கு சம்மன் | முன்னணி ஹாலிவுட் நடிகர், நடிகை மரணம் | முருகதாஸ், சல்மானின் ‛சிக்கந்தர்' பட டீசர் வெளியானது | சப்தம் படத்தின் காலை காட்சி வெளியாகவில்லை |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் தொடரிலிருந்து அதன் இயக்குநர் பிரதாப் மணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சித்து, ஸ்ரேயா அஞ்சன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாக ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் 'வள்ளியின் வேலன்'. விறுவிறுப்பான திரைக்கதையுடன் டிஆர்பியிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வரும் இந்த தொடரை இயக்குநர் பிரதாப் மணி என்பவர் இயக்கி வந்தார்.
இவர் நடிகர்களிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்வதாகவும், ஒருமையில் பேசுவதாகவும் ஏற்கனவே புகார் எழுந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகையுடன் பிரச்னை செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகத்தினர் பிரதாப்பை அதிரடியாக சீரியலை விட்டு நீக்கியுள்ளனர். பிரதாப்பிற்கு பதிலாக இயக்குநர் ஜீவா தான் வள்ளியின் வேலன் தொடரை இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.