மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
'புன்னகை பூவே' சீரியலில் கலைவாணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சைத்ரா சக்காரி. முன்னதாக 2019ம் ஆண்டு ஒளிபரப்பான 'தமிழ்ச்செல்வி' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகியிருந்த இவர், கன்னடா, தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது கலைவாணி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த சைத்ரா, திடீரென இந்த சீரியலை விட்டு விலகியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், சைத்ரா கன்னடத்தில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள 'சாரதே' என்கிற தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இது தமிழில் வெளியான 'செல்லம்மா' தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. சாரதே தொடர் தனக்கு அதிக அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதால் தான் அவர் புன்னகை பூவே சீரியலை விட்டு விலகியிருக்கிறார். இனி புன்னகை பூவே தொடரில் அவர் நடித்து வந்த கதபாத்திரத்தில் ஐஸ்வர்யா என்ற நடிகை தொடர்ந்து நடிக்க உள்ளார்.