ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஆரம்பித்த புதிதில் மக்களின் கவனத்தை ஈர்க்கவும், டிஆர்பிக்காகவும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியை தயாரித்திருந்தனர். நடிகர் ஆர்யாவை வைத்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை மாப்பிள்ளையாகவும், 16 பெண்களை மணப்பெண்களாகவும் வைத்து சுயம்வரம் போல் அந்நிகழ்ச்சியை தயாரித்திருந்தனர். இதில், அபர்ணதி தான் ஆர்யாவிடம் மிகவும் நெருக்கமாகவும் ஆர்யா தனக்கு தான் என்பது போலவும் அந்நிகழ்ச்சியில் ஆட்டிட்யூட் காட்டியிருப்பார்.
ஒருகட்டத்தில் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆன அபர்ணதி இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பெயருக்கு பின்னால் 6ya என வைத்துக்கொண்டு இப்போதும் அதை மாற்றாமல் தான் வைத்திருக்கிறார். இதற்கிடையில் அபர்ணதி சில திரைப்படங்களிலும் நடித்து நல்ல நடிகை என பெயர் வாங்கியிருக்கிறார். அண்மையில், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின் அவர் ஆர்யாவை சந்தித்தாரா என கேட்கப்பட்டபோது, '8 மாதங்களுக்கு முன் நடந்த ஒரு தயாரிப்பாளர் வீட்டு நிகழ்ச்சியில் ஆர்யாவை நான் பார்த்தேன். அப்போது அவர் என்னிடம் ஹாய் அபர்ணதி எப்படி இருக்கிற? நல்லா இருக்கியா? என இயல்பாக பேசினார்.
நான் அவரிடம், நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க? என்று கேட்டேன். நாங்கள் சந்தித்து ரொம்ப வருடம் ஆகிவிட்டது. பழைய ஷார்ட்ஸ்களில் நான் உன் பொண்டாட்டி டா என்று கூட பேசியிருக்கிறேன். அதெல்லாம் விளையாட்டிற்கு பேசியது. நேரில் வாங்க போங்க என்று தான் பேசினேன். எனக்கு அந்த உறவே போதும்' என்று அதில் அபர்ணதி கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் நடிகையாக பரிணமித்து வரும் அபர்ணதி, தற்போது 'வெஞ்சன்ஸ்' என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். விரைவிலேயே முன்னணி நடிகை பட்டியலில் இடம்பிடித்து ஆர்யாவிற்கு ஜோடியாக நடிப்பார் என அபர்ணதியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.