முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா |

சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனி, பிக்பாஸ் சீசன் 8ல் சிறப்பாக விளையாடி 4ம் இடத்தை பெற்றார். பிக்பாஸ் வீட்டில் இவரது விளையாட்டு பெரிதளவில் பேசப்பட்டது. நிஜ வாழ்வில் பயணம் செல்வதில் தீராக் காதல் கொண்ட பவித்ரா ஜனனி அண்மையில், ராயனுடன் சேர்ந்து டிரெக்கிங் சென்றுள்ளார். இதனையடுத்து சிலர் சமூக வலைதளங்களில் இருவர் குறித்தும் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதனால், கோபமடைந்த பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இருதரப்பு ரசிகர்களுக்கும், சில ரசிகர் பக்கங்களுக்கும் சில விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அதில், 'சில விஷயங்களை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அதை புரிந்து கொண்டு நடப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, நண்பர்கள் மற்றும் அவர்களுடன் பயணம் செல்வது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். சூழலை புரிந்துகொள்ளாமல் சிலர் பதிவிடும் கருத்துகள் எனக்கு பிடிக்கவில்லை. நீங்கள் பிக்பாஸ் வீட்டில் சில ஜோடிகளை பார்த்து ரசித்திருக்கலாம். ஆனால், நிஜ வாழ்வில் அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. எதார்த்தமான வாழ்க்கைக்கும் அதற்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருக்கிறது. இதை நீங்கள் மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து எங்களுக்கான இடத்தை கொடுங்கள்' என பவித்ரா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.