'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நுழைந்தவர் வீஜே விஷால். இதனை தொடர்ந்து சீரியல்களில் நடிகராக களமிறங்கிய அவர், கல்யாணமாம் கல்யாணம், அரண்மனை கிளி, பாக்கியலெட்சுமி ஆகிய தொடர்களில் நடித்தார். திடீரென சீரியலை விட்டு விலகி பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக நுழைந்து இறுதிவரை விளையாடி 3ம் இடத்தை பெற்றார்.
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பலர் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் சின்னத்திரை நேயர்களின் பெரும் ஆதரவை பெற்ற வீஜே விஷால் இனி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என கேள்விகள் எழும்பியது. இந்நிலையில், வீஜே விஷால் பிரபல இயக்குநரான ரவிக்குமாரை சந்தித்து அவருடன் செல்பி எடுத்துள்ளார். இயக்குநர் ரவிக்குமார் விஷ்னு விஷால் நடித்த 'இன்று நேற்று நாளை' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், வீஜே விஷால் அவரை சந்தித்திருப்பது அவர் சினிமாவில் அறிமுகமாகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் எழச் செய்துள்ளது.