வருண் தவானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சிவகார்த்திகேயன், ஜெயம் ரவியின் புதிய பட பணிகள் துவங்கின | ‛டூரிஸ்ட் பேமிலி' பட டப்பிங் பணியில் சசிகுமார் | திரையுலகில் 22 ஆண்டுகள் : சூர்யா 45 படப்பிடிப்பில் த்ரிஷா கேக் வெட்டி கொண்டாட்டம் | படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த் | அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். இதில் முதல் நாளே சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது. அதில் முத்துக்குமரன், ஜாக்குலின், ரவீந்தர் சந்திரசேகர், ரஞ்சித், சவுந்தர்யா அருண் பிரசாத் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் யாருக்கு குறைவான வாக்குகளை மக்கள் அளித்திருந்தார்களோ அந்த நபர் இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி முன்னிலையில் எலிமினேட் செய்யப்படுவார்.
மேலும் நேற்று இந்த நிகழ்ச்சியின் கேப்டனை தேர்வு செய்வதற்கான போட்டி நடந்தது. அப்போது ஒருபுறம் ஆண்களும் இன்னொரு பெண்களும் உட்கார வைக்கப்பட்டு, அதில் யார் முதலிடத்தில் வருகிறார்களோ அவர்கள் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் ரவீந்தர் சந்திரசேகர் முதல் நபராக வெளியேறி விட்டார். மற்றவர்கள் எல்லாம் வேகமாக ஓடி சென்று இருக்கையை பிடித்துக் கொள்ள, இவரால் தனது வெயிட்டான உடம்பால் ஓட முடியவில்லை. ஆனால் இப்படி ஓடி வந்தது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு வலி நிவாரணி அளிக்கப்பட்டு மாத்திரை கொடுத்துள்ளார்கள்.
இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் அவரை கைதாங்கலாக அழைத்து சென்று படுக்கையில் அமர வைத்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு கால் வலி இருந்து வருவதால் அடுத்தபடியாக அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.