கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? | விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமாகி வரும் வசந்த் வசி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் என்ட்ரி கொடுத்து அசத்தி வந்தார். இவருக்கு ரசிகர்களின் ஆதரவும் நிறையவே கிடைத்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் அக்ஷய் கமல், பூஜாவுடன் வசந்த் வசியும் எலிமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த மூவரில் யார் இம்முறை வெளியேற போகிறார்கள் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வசந்த் வசி எலிமினேட் ஆகியுள்ளார். இதனால் மனமுடைந்த வசந்த் வசி மிகவும் மனம் வருந்தி கண் கலங்கி பேசியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் வசந்த் வசிக்கு ஆதரவாக கமெண்டுகளில் தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.