'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தயாரிப்பாளர் ரவீந்திரனும், சீரியல் நடிகை மகாலட்சுமியும் சமீபத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள். இது குறித்த தகவல்கள் வெளியான போது அவர்கள் இருவரின் வயது வித்தியாசம் குறித்தும், இது நிஜமான திருமணமா இல்லை ஏதாவது சீரியல் விளம்பரத்திற்காக இப்படி ஒரு புகைப்படங்கள் வெளியாகி உள்ளதா? என்றும் சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வந்தன.
இப்படியான நிலையில் தற்போது ரவீந்திரன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், தங்களது திருமணம் குறித்த தகவலை வெளியிட்டபோது பாசிட்டிவ்- நெகட்டிவ் என இரண்டு விதமான விமர்சனம் வெளியானபோதும் அனைவருக்கும் எனது நன்றி என தெரிவித்துள்ள தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகை வனிதா விஜயகுமாருக்கும் ஒரு பதில் கொடுத்துள்ளார்.
அதாவது, பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்ட போது பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக வனிதா விஜயகுமாரை அப்போது விமர்சனம் செய்தவர்களில் தயாரிப்பாளர் ரவீந்திரனும் ஒருவர். அதன் காரணமாகவே இப்போது அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருப்பதை அடுத்து சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டிருந்தார் வனிதா விஜயகுமார். அந்த பதிவில், கர்மா யாரையும் விடுவதில்லை. அதுதான் தற்போது ரவீந்திரனை நோக்கி திரும்பி வந்திருக்கிறது என்று அவர் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், அதற்கு ரவிந்திரன் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில் ‛வனிதா பதிவை படித்தேன். அதில் குருமா இஸ் மை... என ஏதோ எழுதி இருந்தார். அது என் வாயில் கூட நுழையவில்லை. அதைப்பற்றி இப்போது பேசுவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால் என்னுடைய வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை. அதனால் எதைப் பற்றியும் நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை' என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.