பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வரும் சூர்யா அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்திலும் தற்போது நடித்து வருகிறார். திஷா பதானி நாயகியாக நடிக்கும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் சரித்திர கதையாக தயாராகிறது. பத்து மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 3டியில் வெளியான இந்த போஸ்டரை 24 மணி நேரத்தில் 2.5 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளார்கள். இதை அப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.