பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜலெட்சுமி தற்போது சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். தன்னைத்தானே படிப்படியாக மெருகேற்றி வரும் அவர் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'என்னால் அசைவம் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. ஆனால், முருகனுக்கு விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் 48 நாட்கள் அசைவத்தை நினைத்து கூட பார்க்கமாட்டேன். கடந்த 2, 3 வருடங்களாக எனக்கு இந்த பக்குவம் வந்துள்ளது. இனி தானாகவே அசைவம் சாப்பிடுவதை முழுதாக நிறுத்திக்கொள்வேன்' என கூறியுள்ளார்.