இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' | பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை | 72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு உயில் எழுதி வைத்த 62 வயது ரசிகை | மீண்டும் ஒரு நாய் படம் |
மலையாளத்தில் உருவான மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற படம் மலையாளம், தமிழ் உள்பட பல மொழி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதையடுத்து வெளியான பிரேமலு, ஆடு ஜீவிதம் போன்ற மலையாள படங்களும் கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு படங்களுமே ரூ.100 கோடி வசூலை கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் பஹத் பாசில் நாயகனாக நடித்துள்ள ஆவேசம் என்ற படம் திரைக்கு வந்து ஐந்து நாட்களில் ரூ.50 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. வித்தியாசமான கேங்ஸ்டர் கதைகளத்தில் இந்தப்படம் வெளியானது. இதில் பஹத் பாசில் ரவுடி வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கேரளாவை போலவே தமிழ்நாட்டிலும் ஓரளவுக்கு வரவேற்பு பெற்று வருகிறது.