பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை மலையாள திரையுலகில் மட்டுமே தனது நடிப்பு எல்லையை சுருக்கிக் கொண்டிருந்த நடிகர் பஹத் பாசில், இந்த இரண்டு வருடங்களில் விக்ரம், புஷ்பா, மாமன்னன் என இந்த மூன்று படங்கள் மூலமாக தென்னிந்தியாவில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் கூட பேசப்படும் நடிகராக மாறிவிட்டார். ஆனால் இவை எல்லாவற்றிலும் வில்லன் மற்றும் சீரியஸ் கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார்.
அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் அவரது நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படத்தில் மிகப்பெரிய தாதாவாக நடித்திருந்தாலும் படம் முழுக்க நகைச்சுவையை அள்ளித் தெளிக்கும் விதமாக நடித்திருந்தார் பஹத் பாசில். மேலும் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் இதில் வில்லனாக இல்லாமல் ரஜினியுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
சமீபத்தில் அவர் கூறும்போது, தெலுங்கிலும் இதுபோன்று ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. அந்த வகையில் கடந்த வருடம் ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ் கார்த்திகேயா தயாரிப்பில் தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். அதில் 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்' என்கிற பிக்சன் காமெடி படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.