ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
விஜய் டிவியில் அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கபட்ட சீரியல், கிழக்கு வாசல். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட், ரேஷ்மா, அருண்குமார் ராஜன், அஸ்வினி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்து வந்தனர். சீரியலில் திரைக்கதை நன்றாக இருந்தாலும் சரியான டைம் ஸ்லாட் கிடைக்காததால் டிஆர்பியில் முன்னேற்றமில்லாமல் தவித்து வந்தது.
இந்நிலையில் இந்த தொடரை முடித்து வைக்க சீரியல் குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இதற்காக கிளைமாக்ஸ் காட்சியும் அண்மையில் படமாக்கியுள்ளனர். ஆனால், சீரியலின் கதாநாயகி வராமலேயே அந்த காட்சியை படமாக்கி சீரியலை முடித்து வைத்துள்ளனர். இதுகுறித்து தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ரேஷ்மா, ஒரு மாதத்திற்கும் மேலாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், எனவே தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த சீரியலில் நடித்த அனுபவத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.