
விஷமத்தை பரப்பாதீர்கள் - அதிரடி பதிவிட்ட ரேஷ்மா
இதனை பார்த்த ரேஷ்மாவின் ரசிகர்கள் "நீங்கள் இல்லாததால் சீரியல் இண்ட்ரஸ்டிங்கா இல்லை என்று யார் சொன்னது? ரொம்ப ஓவரா தற்பெருமை பேசாதீங்க" என்று பதிலடி கொடுத்தனர். பதிலுக்கு ஜெய் ஆகாஷ் ரசிகர்களும் ரேஷ்மாவை திட்டியும் அவரது ரசிகர்களிடம் சண்டையிட்டும் வருகின்றனர்.
ஒருகட்டத்தில் மிகவும் கடுப்பான ரேஷ்மா, "உங்களுக்கு நடந்த உண்மை தெரியவில்லை என்றால் தயவு செய்து தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். இந்த தொடர் எதற்காக முடிவுக்கு வந்தது என்பதை இதில் பணியாற்றிய அனைவரும் அறிவர். இதில் என்னுடைய தவறோ, எங்கள் டீமின் தவறோ எதுவுமில்லை. என்னையும் எனது பேன் பேஜ்களையும் அட்டாக் செய்வதால் உண்மை மாறப்போவதில்லை. நீங்கள் உங்கள் ஹீரோவுக்கு ஆதரவாக இருங்கள் ஆனால், விஷமத்தை பரப்பாதீர்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!