என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : இன்று முக்கிய அறிவிப்பு | சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை: 'ஹாட்ரிக்' வெற்றியால் மணிகண்டன் நெகிழ்ச்சி | விவாகரத்து கோரி ஜிவி பிரகாஷ், சைந்தவி மனு தாக்கல் | சலார் சிறுவனை எம்புரானில் நடிக்க வைத்தது ஏன் ? பிரித்விராஜ் ருசிகர தகவல் | சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் ; வழக்கு விசாரணையை முடித்த சிபிஐ | ராபின் ஹுட் புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்த டேவிட் வார்னர் | ராஷ்மிகா மகளுடனும் ஜோடியாக நடிப்பேன் : சல்மான்கான் | எதுக்கு கடைசி நேர டென்ஷன் ? பிரித்விராஜ் நெத்தியடி கேள்வி | மலையாளப் படத்திற்கு முக்கியத்துவம் தரும் ரெட் ஜெயண்ட்? |
சின்னத்திரையின் காமெடி நட்சத்திரம் அறந்தாங்கி நிஷா. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவரான நிஷா, 2015ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார். அதைத்தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4, ஸ்டார் கிட்ஸ் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உள்நாடு, வெளிநாட்டு மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
2018ம் ஆண்டு வெளியான 'மாரி 2' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, சீமராஜா, ஆண் தேவதை, கலகலப்பு 2, திருச்சிற்றம்பலம், ஜெயிலர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார்.
நிஷா சுய தொழிலில் கால் பதித்துள்ளார். 'நிஷா பேஷன்' என்ற பெயரில் துணிக்கடை தொடங்கி உள்ளார். “என் வீட்டின் அருகிலேயே சின்னதாக இந்த கடையை திறந்திருக்கிறேன். எனக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். ஆன்லைன் மற்றும் நேரடியாக பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
நிஷாவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.