Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்த ரவி மோகன் - பாடகி கெனிஷா!

22 ஜூன், 2025 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Ravi-Mohan-and-singer-Kenisha-threw-a-party-for-Kollywood-celebrities!
Advertisement


நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி தம்பதிகளுக்கிடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடனான தன்னுடைய காதலை மறைமுகமாக வைத்திருந்த ரவி மோகன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ஜோடியாக கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு அளித்த ஒரு பேட்டியில், கெனிஷா தனக்கு கிடைத்த சிறந்த வாழ்க்கை துணை என்றும் கூறினார்.

இப்படியான நிலையில் பாடகி கெனிஷா 'அன்றும் இன்றும்' என்ற பெயரில் ஒரு ஆல்பம் வெளியிட்டார். அதில் பாடலை பாடியது மட்டுமின்றி இசையமைத்து நடனமும் ஆடியிருந்தார். இந்த ஆல்பத்தில் ரவி மோகனும் கேமியோவாக தோன்றினார். இந்த ஆல்பத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து ஹிட் அடித்திருக்கிறது.

இந்த நிலையில், தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் கோலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார்கள். அதில், நடிகர் மாதவன், இசையமைப்பாளர்கள் டி.இமான், தரண் குமார், இயக்குனர் சுகா கொங்கரா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த பார்ட்டியின்போது தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையப் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார் பாடகி கெனிஷா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' ... சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தை 23 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்! சிவகார்த்திகேயனின் 'மதராஸி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

22 ஜூன், 2025 - 12:06 Report Abuse
சேகர் ரவி, ஆடி தள்ளுபடியில் அந்த பிள்ளைக்கு ஏதாவது ஒரு நல்ல சட்டை வாங்கி கொடுப்பா. எல்லா உடையும் சின்னதாவே இருக்கு, பத்தலை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in