படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கிறார் நடிகர் ரவி மோகன். இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமணத்தில் பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நேரத்தில் தற்போது பாடகி கெனிஷாவுடன் இலங்கைக்கு சென்றுள்ளார் ரவி மோகன். அங்கு அவர்கள் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் விஜிதா ஹெரத் என்பவரை சந்தித்துள்ளார்கள்.
இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இலங்கை அமைச்சர் விஜிதா ஹெரத். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஆகியோரை சந்தித்தேன். அவர்களுடன் பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கையில் சினிமா டூரிஸத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.