ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'பராசக்தி'. 1965 காலகட்டத்தில் நடந்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பை தழுவி இதன் கதை உருவாகி வருகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம், மதுரை, இலங்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது.
படத்தின் தயாரிப்பாளர் வீடு, அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக சில மாதங்கள் படப்பிடிப்பு நின்று போய் இருந்தது. சில தினங்களுக்கு முன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயன், ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் பங்கேற்று நடித்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக தெலுங்கு நடிகர் ராணாவும் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அவர் இருக்கும் வீடியோ வலைதளங்களில் லீக் ஆகி வைரலானது.