'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சோனா தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் தாரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக கலக்கி வந்தார். அவரது மிரட்டலான நடிப்பு நேயர்களிடமும் பாராட்டுகளை பெற்ற வந்தது. ஆனால், சோனா திடீரென மாரி சீரியலை விட்டு விலகிவிட்டார். இதற்கான காரணம் என்னவென்று தெரியாததால் ரசிகர்கள் குழம்பினர். இந்நிலையில், தற்போது சக நடிகையுடன் ஏற்பட்ட பிரச்னை தான் காரணம் என தெரியவந்துள்ளது.
மாரி தொடரில் சோனாவுக்கு மருமகளாக நடிக்கும் ஷப்னம் நகைச்சுவை உணர்வு கொண்டவர். எப்போதும் எல்லோரையும் ஜாலியாக கிண்டலடித்து பேசுவார். அவர் ஒரு முறை சூட்டிங்கின் போது சோனாவை பற்றி கிண்டலாக பேச இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதனால் கோபமான சோனா ஒருகட்டத்தில், 'மாரி சீரியல்ல அவ இருக்கணும் இல்ல நான் இருக்கணும்' என்ற ரேஞ்சில் சீரியல் குழுவினரிடம் சண்டை போட்டுவிட்டு வெளியேறியிருக்கிறார். சோனாவை சமாதானப்படுத்த முடியாத சீரியல் குழுவினர் தாரா கதாபாத்திரத்திற்கு வேறு நடிகையை தேட ஆரம்பித்துவிட்டதாக சின்னத்திரை வட்டாரத்தினர் பேசி வருகின்றனர்.