சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா |

சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் சீக்கிரமாகவே காதலித்து திருமணம் செய்து கொண்டது போல் சீக்கிரமாகவே பிரிந்தும் விட்டனர். அவர்கள் பஞ்சாயத்து தான் சோஷியல் மீடியாவில் தற்போது பேசு பொருளாகியுள்ளது. சம்யுக்தா குறித்து விஷ்ணுகாந்த் சில பேட்டிகளில் பேசியிருந்ததை தொடர்ந்து சம்யுக்தா அண்மையில் லைவ் வீடியோவில் விஷ்ணுகாந்துக்கும் தனக்கும் இடையேயான பிரச்னை குறித்து விரிவாக பேசியிருந்தார். அதில், விஷ்ணுகாந்த் தன்னை மிரட்டி தான் திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பலரும் விஷ்ணுகாந்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். விஷ்ணுகாந்தும் நேற்று (மே 17) மாலை 6 மணிக்கு லைவ்வில் வந்து உண்மையை பேசப்போவதாக போஸ்ட் செய்திருந்தார்.
இதனையடுத்து நேற்று மதியமே இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்த சம்யுக்தா, ‛சம்யுக்தாவின் உறவினர் ஒருவருக்கு போன் செய்து சம்யுக்தா பற்றிய பாஸ்ட் லைப் ரகசியங்களும், சம்யுக்தாவின் 4 மணி நேர வீடியோவும் தன்னிடம் இருப்பதாகவும், தொடர்ந்து என்னை பற்றி சம்யுக்தா பேசினால் அதை வெளியிடுவேன்' என்று விஷ்ணுகாந்த் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சம்யுக்தா போலீசில் புகார் அளித்ததாகவும் ஆனால், விஷ்ணுகாந்த் விசாரணைக்கு வரவில்லை. சம்மனையும் வாங்கவில்லை என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.




