8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி | மகேஷ்பாபுவின் 'அத்தடு' 1500 முறை டிவியில் ஒளிபரப்பு: இப்படியும் ஒரு சாதனையா? | பிளாஷ்பேக்: மகாத்மா காந்தி பார்த்த ஒரே சினிமா | பிளாஷ்பேக்: கவிஞருக்காக காட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் | 'ஸ்வீட்ஹார்ட்' படத்தால் 4 கோடி நஷ்டம்; வருத்தத்தில் யுவன் ஷங்கர் ராஜா | டெஸ்ட் - நேரடி ஓடிடி வெளியீட்டிலேயே பெரிய லாபம் | மோகன்லால் - விக்ரம் நேரடி மோதல் | 'இட்லி கடை' - இன்னும் தயாராகவில்லையா? | 'சிம்பு 49' படத்தில் சந்தானம்? ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் | 'கேம் சேஞ்ஜர்' கருத்து சொன்ன தமனை 'அன்பாலோ' செய்த ராம் சரண் |
சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதியும், நக்ஷத்திராவும் நல்ல தோழிகளாக இருந்து வந்தனர். இடையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநிதி நக்ஷத்திராவை பற்றியும் அவரது கணவர் பற்றியும் ஏதேதோ சர்ச்சைகளை கிளப்பினார். இதனையடுத்து மன அழுத்தத்திற்காக சிகிச்சையும் பெற்றார். மற்றொருபுறம் நக்ஷத்திரா அவரது கணவர் விஸ்வாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார். தற்போது கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்திராவுக்கு கர்ப்பகாலத்தில் நிகழும் வளைகாப்பு சடங்கு நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஸ்ரீநிதி தோழியை வாழ்த்தி நலங்கு வைத்துள்ளார். மேலும், விஸ்வாவுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.