'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

'குட் பேட் அக்லி' படத்தை அடுத்து கார் பந்தயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார். இவரது அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கப் போகிறார். அஜித்தின் 64வது படமான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கேஜிஎப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் விக்ரமுடன் 'கோப்ரா' படத்தில் நடித்திருந்தார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்ட ஆதிக் ரவிச்சந்திரன் விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பை வெளியிடப்போகிறார்.
அதோடு, அஜித் நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நிலையில் முன்னதாகவே மற்ற நடிகர், நடிகைகளை வைத்து படப்பிடிப்பை தொடங்கவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார். அந்தவகையில் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களில் அடுத்தடுத்து நடித்த அஜித், அதன்பிறகு வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களில் நடித்தவர், இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தை அடுத்து மீண்டும் நடிக்க போகிறார்.




