என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஹிந்தியில் 'பவால்', 'சிச்சோரே' ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, தற்போது 'ராமாயணா' எனும் படத்தை இயக்கி வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யஷ் நடிக்கின்றனர். அதேபோல், அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தை 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகத்தை 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த படத்தில் சீதாவாக நடிப்பதற்கான ஆடிஷனில் முதலில் 'கேஜிஎப்' படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி பங்கேற்றிருந்தார். ஆனால், ஆடிஷனில் அவர் தேர்வாகவில்லை; அவருக்கு பதிலாக சாய் பல்லவி சீதாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு நழுவிய வாய்ப்பு குறித்து ஸ்ரீநிதி ஷெட்டி கூறியதாவது: ராமாயணா படத்தில் சீதா வேடத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றிருந்தேன். 3 காட்சிகளை நடித்துக்காட்ட சொன்னார்கள். என் நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது.
அடுத்த ஓரிரு மாதங்களில் கேஜிஎப் படம் வெளியானது. அதில் யஷ் ஜோடியாக நடித்திருந்த நிலையில், ராமாயணா படத்தில் யஷ் ராவணனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ராவணனாக யஷூம், சீதாவாக நானும் நடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதற்காக படக்குழுவினர் எனக்கு வாய்ப்பளிக்காமல் விட்டிருக்கலாம். அதன்பிறகு, சீதாவாக சாய் பல்லவி தேர்வானதாக கூறப்பட்டது. அந்த கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி நல்ல சாய்ஸ் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.