நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமான வனிதா விஜயகுமார் அடுத்த பிக்பாஸ் சீசன்களை குறித்து விமர்சனமும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சீசன் 6 ஆரம்பம் முதலே போட்டியாளர்கள் பற்றிய தனது கருத்தை பதிவிட்டு வந்தார். தற்போது பிக்பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், போட்டியாளரான விக்ரமனுக்கு அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளது. அந்த செயலை வனிதா விஜயக்குமார் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ஒருசாரார் வனிதாவை விமர்சித்து வந்த நிலையில், தற்போது கொலை மிரட்டல்களும் விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
இதுகுறித்து மீண்டும் பகிர்ந்துள்ள வனிதா, 'என்னை மிரட்டுவதற்காக யூ-டியூப் சேனலுக்கு போன் செய்து மிரட்டி வருகின்றனர். யாருக்கும் எதுக்கும் பயந்தவ நான் இல்லை. உங்க அரசியல் புத்தி என்னன்னு காலம் காலமா பாத்திருக்கோம். நேர்மையா மக்களுக்கு நல்லது செஞ்சு முன்னேற பாருங்க. உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சிக்காதீங்க' என பதிவிட்டு சூடுபோட்டுள்ளார்.
இதனையடுத்து ஒரு சாதாரண டிவி நிகழ்ச்சிக்காக ஒரு அரசியல் கட்சி இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகிறதா? என பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.