கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
பிரியாமணி சோலோ ஹீரோயினாக நடித்த தெலுங்கு படம் பாமகலாபம். இந்த ஆண்டின் துவக்கத்தில் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அபிமன்யு தடிமேட்டி எழுதி இயக்கிய இந்தப் படத்தில் ஜான் விஜய், நடிகர் சாந்தி ராவ், நடிகர் சரண்யா பிரதீப் கிஷோர் நடித்துள்ளனர். மார்க் ரோபின் இசை அமைத்துள்ளார், தீபக் யரகீரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமையல் குறிப்பு தரும் யு டியூப் சேனல் நடத்தும் பிரியாமணி குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை வரும்போது எந்த லெவலுக்கு செல்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
படம் குறித்து பிரியாமணி கூறியிருப்பதாவது: இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கொரோனா காலத்தின் போது மேற்கொள்ளப்பட்டு, 25 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்தோம். இது நான் முதன்முறையாக எதிர்கொண்ட ஒரு சவாலாகவும், முற்றிலும் ஒரு புதிய அனுபவமாகவும் இருந்தது. இதில் வரும் அனுபாமா கதாபாத்திரத்தில் நான் முழுமையாக குடும்ப பெண்ணாக வாழ்ந்து இருக்கிறேன்.
கலர்ஸ் தமிழ் டிவியில் புத்தாண்டு அன்று எனது திரைப்படம் உலகத் தொலைக்காட்சி பிரீமியராக வெளிவருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கலர்ஸ் தமிழுடன் இணைந்து அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். என்கிறார் பிரியாமணி.
கலர்ஸ் தமிழில் புத்தாண்டு சிறப்பு படமாக பாமகலாபம் ஜனவரி 1, ஞாயிறு மதியம் 2.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.