'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 அண்மையில் முடிவுக்கு வந்தது. பிரபலங்களுக்கிடையே நடைபெற்ற கடுமையான போட்டியில் ரசிகர்களின் பேவரைட் ஜோடிகளான அமீர் - பாவ்னி மற்றும் சுஜா வருணி - சிவா என இருவருமே வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். பரிசுத்தொகையான 5 லட்சம் 2 ஜோடிகளுக்கும் சமமாக பிரித்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் போது சுஜா வருணி - சிவா ஜோடிக்கு ஏற்பட்ட துயரமான சம்பவம் பற்றிய தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சுஜா வருணி கர்ப்பமாக இருந்துள்ளார். எனினும், மருத்துவரின் அறிவுரையின் படி தொடர்ந்து நிகழ்ச்சியில் நடனமாடியிருக்கிறார். ஆனால், ஒருநாள் நிகழ்ச்சியின் அவருக்கு உடல்சுகவீனம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுஜா வருணியின் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், ஜோடிகள் இருவரும் சோகத்தில் மூழ்கினர். இருப்பினும் முழு உழைப்பை செலுத்தி அந்த துன்பத்தில் இருந்து வெளிவந்ததாகவும், அந்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இந்த டைட்டில் வின்னர் பட்டம் என சுஜா வருணி - சிவா தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களது வெற்றியை பலர் பாராட்டி வந்தாலும், குழந்தை வயிற்றில் இருக்கும் போது இப்படி ரிஸ்க் எடுத்ததே தவறு என விமர்சித்தும் வருகிறார்கள்.