மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பழம்பெரும் கன்னட நடிகை மாலாஸ்ரீ. பிரபல கன்னட தயாரிப்பாளர் ராமுவை திருமணம் செய்த அவருக்கு ராதனா ராம் என்ற மகள் இருக்கிறார். அவர் இப்போது சினிமாவுக்கு நடிக்க வந்திருக்கிறார். தர்ஷன் ஜோடியாக அறிமுகமாகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. பெங்களூரில் உள்ள ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நேரில் கலந்து கொண்ட ஸ்ரீ ரவிசங்கர் படப்பிடிப்பை துவங்கி வைத்தார். ராக்லைன் புரடக்சன்ஸ் சார்பில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். தருண் சுதிர் இயக்குகிறார்.
மகள் அறிமுகமாவது குறித்து மாலாஸ்ரீ கூறியதாவது: கன்னட திரை உலகில் அறிமுகமாகும் எனது மகள் ராதனா ராமுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் அளிக்க வேண்டும். ராக்லைன் வெங்கடேஷ் என்னுடைய படம் மூலமாக தயாரிப்பு துறையில் நுழைந்தார். இன்று எனது மகள் அவருடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆகிறார்.
ராதனா சிறிய வயதிலேயே நடிகையாக வேண்டும் என விரும்பினார். அதற்காக மும்பையில் நடிப்பு மற்றும் நடனத்திற்காக பயிற்சி எடுத்துக் கொண்டார். உண்மையிலேயே கடந்த சில வருடங்களாக அவர் கடினமாக உழைத்தார். அவர் என்னுடைய மகள் என அடையாளப்படுத்தப்படாமல், தனக்கான ஒரு பாதையை தானாகவே தேர்ந்தெடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். என்கிறார் மாலாஸ்ரீ.