மொட்டைத்தலையுடன் கோலங்கள் ஆனந்தி! என்னாச்சு அவருக்கு? | உங்களால் எனக்கு ஏற்பட்ட ரூ.1 கோடி நஷ்டம் : பிரகாஷ்ராஜை விளாசிய தயாரிப்பாளர் | உலக சாதனை புத்தகத்தில் நடிகர் அஜித்தின் நிறுவனம் | ‛தெறி' பட ஹீந்தி ரீ-மேக்கில் சல்மான் கான் | நவராத்திரி : துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பிரதிபலித்த ஏக்தா ஜெயின் | வெப் சீரியல் இயக்கும் நடிகை ரேவதி! | ஜசரி கணேஷ் பிறந்தநாள் பார்டியில் தனுஷ் : அடுத்த படம் இவருக்குதான் | விஜய்யின் அரசியல் வருகை - நடிகர் கார்த்திக் சொன்ன கருத்து! | ஒரு படம் பிளாப் ஆனால் நடிகை தான் காரணமா? - மாளவிகா மோகனன் ஆதங்கம் | கணவருடன் இத்தாலி நாட்டுக்கு ஹனிமூன் சென்ற நடிகை மேகா ஆகாஷ் |
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்தாலும் மிகவும் சொற்பமான நபர்களை மட்டுமே பாலோ செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் சீரியல் நடிகை கேப்ரில்லா செல்லஸை ரஹ்மான் இன்ஸ்டாவில் பின் தொடர ஆரம்பித்தார். இதனை தனக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி என கேப்ரில்லாவும் பகிர்ந்திருந்த நிலையில், 'மூப்பில்லா தமிழே தாயே' என்கிற ஆல்பத்தில் பாடி நடிக்கும் வாய்ப்பை கேப்ரில்லாவுக்கு ரஹ்மான் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் டிவி நடிகை ஒருவரை பாலோ செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் அந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான வீஜே திவ்யா ஆரம்பத்தில் 'சமையல் மந்திரம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அப்போது அவர் காட்டிய கவர்ச்சியால் அவருக்கு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். தற்போது அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சமத்து பெண்ணாக சீரியலில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வித்தியாசமான கான்செப்ட்டுகளில் காமெடி வீடியோக்களையும், தினம் ஒரு குறள் என்கிற கான்செப்டில் திருக்குறள் தொடர்பான வீடியோவையும் திவ்யா தொடர்ந்து செய்து வருகிறார்.
வீஜே திவ்யாவின் இந்த செயலை மறைந்த நடிகர் விவேக் கூட பாராட்டியிருந்தார். தற்போது, திவ்யாவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாவில் பின் தொடர ஆரம்பித்திருக்கிறார். சமீப காலங்களில் திறமையானவர்களை கண்டறிந்து பாராட்டி அங்கீகரிப்பதுடன் அவர்களுக்கு வாய்ப்பையும் ரஹ்மான் வழங்கி வருகிறார். எனவே, திவ்யாவிற்கு அவரது அடுத்த ப்ராஜெக்டில் ஏ.ஆர்.ரஹ்மான் வாய்ப்பு வழங்குவாரா என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.