ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடைசி வாரம் வரை மிகவும் கடினமான போட்டியாளராக இருந்தார் ஜூலி. முந்தைய சீசனில் செய்த தவறை செய்யாமல், தான் இழந்த பெயரை மீண்டும் பெறுவதற்காக மக்களிடம் தன்னை நிரூபிப்பதற்காக விளையாடினார் ஜூலி. கடைசி வாரம் வரை வந்துவிட்டதால் கண்டிப்பாக இறுதிபோட்டியில் ஜூலி விளையாடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஜூலி இரண்டாவது எவிக்ஷனில் அபிராமிக்கு அடுத்தப்படியாக வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஜூலி, சமூக வலைதளத்தில் தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'வெற்றி என்பது இறுதியில் நாம் எதை பெற்றோம் என்பது அல்ல. வெற்றிக்கான பயணத்தில் நாம் யாராக இருந்தோம் என்பதே முக்கியம்' என பதிவிட்டிருந்தார். ஜூலியின் இந்த பாசிட்டிவான ஆட்டிட்யூட் பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜூலிக்கு ஆதரவாக பேசி வரும் பலரும் 'நீ மக்கள் மனதை வென்றுவிட்டாய். இது தான் உனது வெற்றி' என அவரை புகழ்ந்து வருகின்றனர்.