ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
சின்னத்திரை பிரபலங்களுக்கு மிக விரைவிலேயே சினிமா வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அதிலும் விஜய் டிவி நடிகர்கள் பலரும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் 'கதிர்' கதாபாத்திரத்தில் நடித்து வந்த குமரனும் தற்போது ஹீரோவாகிறார்.
குமரன் தற்போது புல்லட் புரொபோஸல் என்ற வெப் தொடரில் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும், அதில் அமித் பார்கவ், சைத்ரா ரெட்டி என பல சீரியல் பிரபலங்கள் இணைய உள்ளனர். இந்த வெப் தொடரில் குமரனுக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.