விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
விஜய் டிவியின் '7 சி' தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீ நிதி. தொடர்ந்து 'பகல் நிலவு', 'யாரடி நீ மோகினி' ஆகிய சீரியல்களில் நடித்தார். இவர் தற்போது அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில், 'படம் ஓடுதோ இல்லையோ படத்தில பைக் தான் அதிகமா ஓடுது. ஆனால் படத்துல அஜித் சார் செம க்யூட்டாக இருந்தார்' என கூறியிருந்தார். இதை பார்த்து கடுப்பான அஜித் ரசிகர்கள் அவரை விடாமல் கலாய்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஸ்ரீ நிதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சொல்லி வந்தனர்.
அஜித் ரசிகர்களின் இந்த ஆவசேமான போக்கிற்கு தற்போது ஸ்ரீ நிதி பதில் கொடுத்துள்ளார். ஸ்ரீ நிதி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், 'நான் காசு கொடுத்துதான் படம் பார்த்தேன். அந்த படம் எப்படி இருக்குன்னு சொல்ற உரிமை எனக்கு கிடையாதா?. நான் விஜய் ரசிகை. அதான் இப்படி எல்லாம் பேசுறதா சொல்றாங்க. ஆனால், உண்மையா நான் சிம்பு ரசிகை. நான் எதார்த்தமா பேசினது இவ்வளவு பெரிய சர்ச்சையாகும்னு தெரியாது. என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணை பார்த்து இப்படிதான் பேசுவீங்களா. நான் பேசினதுல எந்த தவறும் இல்ல. குறிப்பா நான், அஜித் சார் பத்தி எதுவும் தப்பா சொல்லவும் இல்ல. அதனால், நான் எந்த மன்னிப்பும் கேட்கமாட்டேன்' என கூறியுள்ளார்.
தற்போது அஜித் ரசிகர்களில் சிலரே ஸ்ரீ நிதிக்கு சப்போர்ட் செய்து மற்ற ரசிகர்களின் அநாகரீகமான செயல்களை கண்டித்து வருகின்றனர்.